மணல் திருட்டு ஹிந்து முன்னணி எச்சரிக்கை
ஒட்டன்சத்திரம்: தேவச்சின்னாம்பட்டியில் எந்த அனுமதியும் இல்லாமல் ஐந்து ஆண்டுகளாக தொடரும் மணல் திருட்டை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டன்சத்திரம் ஹிந்து முன்னணி கிழக்கு ஒன்றியம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஒன்றிய செயலாளர் நாவல்துரை, நிர்வாகிகள் செல்வக்குமார், சேதுராமன், வரதராஜ் ஜெயராமன், ஊர் மக்கள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என ஒன்றிய செயலாளர் நாவல்துரை எச்சரித்துள்ளார்.