உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாகனங்களை தடுத்த ஹிந்து முன்னணியினர்

வாகனங்களை தடுத்த ஹிந்து முன்னணியினர்

பழநி : பழநி அடிவாரம் சப்பானி காளியம்மன் கோயில் அருகே இட்டேரி ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக செல்லும் கனரக வாகனங்களை தடுத்து நிறுத்த கோரி ஹிந்து முன்னணியினர் ரோட்டின் குறுக்கே டூவீலர்களை நிறுத்திபோராட்டம் செய்தனர்.பழநி அடிவாரம் பகுதியில் சபரிமலை ஐயப்ப சீசன் துவங்கியதில் இருந்து கடைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு நேர நிர்ணயம் இன்றி பகல், இரவு பொழுதுகளில் கனரக வாகனங்கள் மூலம் பொருட்கள் கொண்டு வந்து இறக்கி ஏற்றி செல்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி நேற்று இரவு ஹிந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் பாலன் தலைமையில் இட்டேரி ரோட்டில் இடையூறாக சென்ற கனரக வாகனங்களை ரோட்டின் நடுவே டூவீலர்கள் நிறுத்தி போராட்டம் நடத்தினர். கனரக வாகனங்கள் செல்ல நேர நிர்ணயம் செய்ய வேண்டும். குறுகிய சாலைகளில் சிறிய வாகனங்களில் மட்டுமே பொருட்களை எடுத்து வர வேண்டும் என கோரினர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை