உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தீபத்துடன் ஹிந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

 தீபத்துடன் ஹிந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மலைக்கோட்டை மேல் அபிராமி அம்மன் சிலையை மீண்டும் நிறுவிடக் கோரியும், கார்த்திகையை முன்னிட்டு மலைக்கோட்டை மேல் தீபம் ஏற்றிட வேண்டுமென மத்திய, மாநில அரசை வலியுறுத்தி ஹிந்து மக்கள் கட்சி சார்பில் தீபம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை தபால் அலுவலகம் முன்பாக நடந்த இதற்கு மாநில தொண்டர் அணி தலைவர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட தொண்டரணி தலைவர் மணிகண்டன், நிர்வாகி சிவா, முழு நேர ஊழியர் ராமசந்திரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, மாநில துணைத்தலைவர் ஐயப்பன், பொதுச்செயலாளர் அண்ணாதுரை, இணைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி, சிவசேனை தமிழ்நாடு நிறுவனத்தலைவர் செல்வம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி