மாடுகளை திரியவிட்டால் திரும்ப கிடைக்காது; கலெக்டர் எச்சரிக்கை
திண்டுக்கல்: ''திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு தொல்லை தரும் வண்ணம் மாடுகளை திரிய விட்டால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு திரும்ப கிடைக்காத வகையில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்'' என கலெக்டர் பூங்கொடி எச்சரித்துள்ளார்.அவர் கூறிதாவது : திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகளை திரிய விடுவது தெரிய வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. மாடுகளை தங்களது சொந்த இடத்தில் அடைத்து சுகாதார முறையில் கழிவுகளை அகற்றி பராமரித்திட வேண்டும். மாடுகளை திரிய விட்டால் எவ்வித முன் அறிவிப்புமின்றி மாடுகளை பிடித்து பவுண்டில் அடைக்கப்படுவதுடன் மாடுகளின் உரிமையாளருக்கு முதல் முறை மாடு ஒன்றிற்கு ரூ.2000, 2ம் முறை ரூ.5000 , அபராதம் விதிக்கப்படும். அதே உரிமையாளர் மீண்டும் மாடுகளை திரிய விட்டால் மாடுகள் திருப்பி வழங்கப்படாது. மாடுகளை பொது ஏலம் மூலம் விற்பனை செய்து மாநகராட்சி கணக்கில் செலுத்தப்படும். மேலும் போலீசார் மூலம் நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றார் .