உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இப்படி இருந்தால் எப்படிங்க : வேகத்தடையாக மாறிய பாலங்களால் பாதிப்பு : விபத்துடன் வாகனங்களும் பழுதாகும் அவலம் -

இப்படி இருந்தால் எப்படிங்க : வேகத்தடையாக மாறிய பாலங்களால் பாதிப்பு : விபத்துடன் வாகனங்களும் பழுதாகும் அவலம் -

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம ரோடுகளில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் மீது முறையாக தார் அமைக்காததால் விபத்து , கடும் அதிர்வால் வாகன பழுது என பல்வேறு சிக்கல்களை வாகன ஓட்டிகள் சந்திக்கின்றனர்.நகரங்கள், கிராமங்களை இணைக்கும் வகையில் இருக்கும் ரோடுகளை தேசிய நெஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலை, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் சார்பில் அமைக்கப்படுகின்றன. இவற்றில் ஆங்காங்கே மழை நீர், வடிகால், பாசன வாய்க்கால் நீர் கடந்து செல்ல வசதியாக சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் தேசிய, மாநில நெடுஞ்சாலை அந்தஸ்து ரோடுகளில் கட்டப்படும் பாலங்களையொட்டி கப்பி கற்களை கொண்டு நிரப்பி எதிர்காலத்தில் மண் இறுக்கம் ஏற்பட்டு பள்ளமாவதை தடுக்க அக்கறை காட்டுகின்றனர். அப்படியே மண் இறுக்கம் ஏற்பட்டாலும் சில வாரங்களில் அவ்விடங்களில் தார் கலவை கொண்டு சீரமைப்பு பணி செய்கின்றனர். ஆனால் கிராம ரோடுகளில் ஒப்பந்த அடிப்படையில் ரோடு அமைத்த பின்னர் அடுத்த 5 ஆண்டுகள் கழித்து ரோடு புதுப்பித்தல் பணி நடக்கும் வரை கவனிப்பில்லாத நிலை உள்ளது. கிராம ரோடுகளில் புதிய பாலம் கட்டும் இடங்களில் போதுமான அளவில் மண்ணை இயந்திரங்கள் கொண்டு சமன்செய்வதில்லை. இதனால் சில வாரங்களிலே பாலத்தையொட்டிய பகுதிகளில் மண் இறுக்கம் ஏற்பட்டு பள்ளம் ஏற்படுகிறது. ஏறத்தாழ இவையும் வேகத்தடைகளாக மாறிவிடுகின்றன. இதனால் விபத்துகளும், வாகனங்கள் கடக்கும்போது கடும் அதிர்வும், பேரிரைச்சலும் ஏற்படுகிறது. வாகனங்களும் விரைவில் பழுதாகி செலவு ஏற்படும் நிலைக்கு வருகின்றன.- ...............- பராமரிக்கலாமே யானை வாங்க பணம் இருந்தது அங்குசம் வாங்க பணமில்லை என்பது போல் கிராம ரோடு பாலங்களில் அலட்சிய போக்கு காணப்படுகிறது. பாலம் அமைக்கும்போதே மண்ணை கொட்டி இயந்திரங்களை பயன்படுத்தி மண் நன்றாக இறுக செய்ய வேண்டும். அவரச கதியில் பணி முடிப்பதால் சில வாரங்களிலே பள்ளம் ஏற்படுகிறது. இவ்விடங்களை சரக்கு ஏற்றாத நிலையில் லாரி, டிராக்டர்கள் கடக்கும்போது பெரிய இரைச்சல் ஏற்படுகிறது. ஏதோ விபத்து ஏற்பட்டுவிட்டதோ என அப்பகுதியினர் ஒவ்வொரு சத்தத்திற்கும் பதறுகின்றனர். இதுபோன்ற பாலங்கள் விரைவில் பலமிழக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே பாலங்களில் சமமான மட்டத்தை பராமரிக்க வேண்டும்.- பி.நீலக்கண்ணன், அ.தி.மு.க., கிளை செயலாளர், புதுகொம்பேறிபட்டி, வடமதுரை.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி