உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயில் உபயோகிப்பாளர் சங்க துவக்க விழா

ரயில் உபயோகிப்பாளர் சங்க துவக்க விழா

பழநி: பழநி ரயில் உபயோகிப்பாளர் நலச்சங்கம் 6வது ஆண்டு துவக்க விழா கவுரவ தலைவர் ஹரிஹரமுத்துஅய்யர், தலைமையில் நடந்தது. கவுரவ செயலாளர் கந்த விலாஸ் பாஸ்கரன், கவுரவ ஆலோசகர் வள்ளுவர் தியேட்டர் செந்தில்குமார், அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பழநி மாவட்டத் தலைவர் ஜே.பி சரவணன் பங்கேற்றனர். பழநி--கொடைக்கானல் ரோப் கார் திட்டம், பழநி-- ஈரோடு ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் ரயில்வே லெவல் கிராசிங் மேம்பாலங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கவும் அனைத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த கொங்கு குளோபல் இயக்குனர் சதீஷ், சங்க இணை செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் பாலாஜி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ