உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில் மீட்பு நிலத்தில் தனிநபர்கள்; போலீசில் புகார்

கோயில் மீட்பு நிலத்தில் தனிநபர்கள்; போலீசில் புகார்

பழநி:பழநி முருகன் கோயில் தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1. 40 ஏக்கர் இடத்தை கோயில் நிர்வாகம் மீட்டு அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாதகை வைத்துள்ளது. இதோடு இங்கு பக்தர்கள் கட்டணமில்லாமல் வாகனங்கள் நிறுத்தம் அமைக்க பணிகள் நடைபெற்று வந்தது. இங்கு நேற்று மாலை சிலர் அப்பகுதியில் திரண்டனர். இணை கமிஷனர் மாரிமுத்து பழநிஅடிவாரம் போலீசில், சண்முகசுந்தரம், கணேசன், முருகதாஸ், மகேஸ்வரன், கணேசன், ஆனந்தகுமார், சங்கர வடிவு குமரகுருபரன் மீது புகார் அளித்துள்ளார். முருகதாஸ் கூறுகையில், தண்டபாணி சுவாமி அறக்கட்டளை வாரிசுதாரான எங்களுக்கு இந்த இடத்திற்கு உரிமை இல்லை என கோயில் நிர்வாகம் கூறி நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு வருகின்றனர். தமிழக அரசு தலையிட்டு எங்களுக்கு நியாயம் கிடைக்க உதவ வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை