தீ விபத்துக்களை தடுக்க மருத்துவமனைகளில் ஆய்வு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீத்தடுப்பு உபகரணங்கள் முறையாக பயன்பாட்டில் இருக்கிறதா என சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.நத்தம், சாணார்பட்டி, பழநி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 12 அரசு மருத்துவமனைகள் செயல்படுகிறது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இம்மருத்துவமனைகளில் திடீரென ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில் தீத்தடுப்பு உபகரணங்கள் உள்ளது. இவைகள் முறையாக செயல்படுகிறதா என 6 மாதத்திற்கு ஒருமுறை சுகாதாரத்துறை அதிகாரிகள், தீயணைப்புதுறை அதிகாரிகள் இணைந்து பையர் சேப்டி கமிட்டி ஆடிட் எனும் பெயிரில் ஆய்வு செய்கின்றனர். இக்குழுவினர் நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் பூமிநாதன் தலைமையில் ஆய்வை தொடங்கினர். தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுக்க வேண்டும். தீத்தடுப்பு உபகரணங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தினர். உபகரணங்கள் செயல்படுகிறா எனவும் ஆய்வு செய்தனர் .