மேலும் செய்திகள்
மல்லிகைப்பூ ரூ.4,200 திண்டுக்கல்லில் விற்பனை
01-Jan-2025
திண்டுக்கல் : புத்தாண்டு, வரத்து குறைவால் திண்டுக்கல் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.4200க்கு விற்பனையானது.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பூ மார்க்கெட்டிற்கு வேடசந்துார், தாடிக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூக்களை கொண்டு வருகின்றனர். மழை ,பனி காரணமாக பூக்களின் வரத்து குறைந்தது. புத்தாண்டு, மார்கழி வழிபாடுகளால் தேவை அதிகரித்தது. இதனால் விலை அதிகரித்துள்ளது. கிலோ முல்லை பூ ரூ.1100, கனகாம்பரம் ரூ.1000, ஜாதிப்பூ ரூ.800, காக்கரட்டான் ரூ.750, அரளி ரூ.300, பட்டன் ரோஜா ரூ.300, ரோஜா ரூ.300க்கு விற்பனையானது. மல்லிகை நேற்று கிலோ ரூ.4200க்கு விற்பனையானது.
01-Jan-2025