உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆஞ்சநேயர் கோயில்களில் ஜெயந்தி வழிபாடு

ஆஞ்சநேயர் கோயில்களில் ஜெயந்தி வழிபாடு

திண்டுக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.திண்டுக்கல் மெயின்ரோடு வீரஆஞ்சநேயர் கோயிலில் பூப்பந்தல் அமைக்கப்பட்டு, அதிகாலை 5:00 மணிக்கு சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஆப்பிள், ஆரஞ்சு உள்பட பல்வேறு பழங்களால் அலங்காரம், தீபாராதனை நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மலைக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு யாகம், திருமஞ்சனம் நடந்தது. கோபாலசமுத்திரம் பால ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அபிராமி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிஷேகங்களும் சிறப்பு ஆராதனை நடந்தது. ஆஞ்சநேயருக்கு வட மாலை சாற்றி பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், நெய்வேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி,அர்ச்சகர்கள் ராமமூர்த்தி ரமேஷ் பத்ரி மணியம் அரவிந்தன் ஏற்பாடு செய்தனர். முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில், எம்,வி.எம்., நகர், திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயில் ஆஞ்சநேயர், தென்திருப்பதி வெங்கடாஜலபதி ஆஞ்சநேயர் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமிக்கு துளசி, வெற்றிலை, வடை மாலை சாற்றி வழிபட்டனர்.வத்தலக்குண்டு வால் கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் ஐந்தாயிரம் வடைகளை கொண்டு உருவாக்கப்பட்ட மாலை அலங்காரம் செய்யப்பட்டது. பழவகை தோரணங்களுடன் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் வால்கோட்டை ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முதல் வார்டு பள்ளியில் 84ம் ஆண்டு படித்த மாணவர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.கெங்குவார்பட்டி முக்கிய ப்ராண ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பு பூஜையுடன் நடந்தது. பக்தர்கள் மூன்று மணி நேரம் தொடர்ந்து ஜெயராம், ஸ்ரீ ராம் நாமத்தை பாடினர்.சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, பஞ்ச சுக்த, மகா சுதர்சன, சகஸ்ரநாம ஹோமங்கள், மூலவருக்கு பாலாபிஷேகம், புஷ்பாஞ்சலி நடந்தது. ராஜ அலங்காரத்துடன், விசேஷ பூஜைகள் நடந்தது. உற்ஸவர் சீதேவி, பூதேவி சமேத கோதண்டராமருக்கு, சிறப்பு அலங்காரத்துடன், அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில், கன்னிவாடி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், ரெட்டியார்சத்திரம் கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், அனுமன் ஜெயந்தி சிறப்பு பூஜைகள் நடந்தது.பழநி பாலசமுத்திரம் பாலாறு அணை சுயம்பு ராம வீர ஆஞ்சநேயர் கோயில், பால சமுத்திரம் ஆஞ்சநேயர் கோயில், கரடி கூட்டம், சாந்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை