சாதித்த ஜெயசீலன் பள்ளி
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஜெயசீலன் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவி தாரகேஸ்வரி 568, பிரஜேஷ் 529, ஹரிணி 527 மதிப்பெண்கள் பெற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் அருள்மாணிக்கம், செயலாளர் ரோஸ் சுமதி, நிர்வாக இயக்குனர் ஜெயந்த் அருள் மாணிக்கம், பள்ளி முதல்வர் யாமலதா பாராட்டினர். 11ம் வகுப்பு சேர்க்கையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக தாளாளர் அருள் மாணிக்கம் தெரிவித்தார்.