உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாய் பாரத் கல்லுாரியில் கபடி போட்டி

சாய் பாரத் கல்லுாரியில் கபடி போட்டி

வேடசந்துார் : நவாமரத்துப்பட்டி ஸ்ரீ சாய் பாரத் கலை அறிவியல் கல்லுாரியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. கல்லுாரி நிர்வாக அலுவலர் ஸ்டாலின் தலைமை வகித்தார். ஜி.டி.என்., கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் முதலிடம், ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் 2ம் இடம், கன்னிவாடி கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் மூன்றாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதை மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன், தேசிய இளையோர் விருதாளர் மாரிமுத்து, துணை பேராசிரியர் ராதாகிருஷ்ணன் வழங்கினர். கல்லுாரி முதல்வர் பிரான்சிஸ், துணை முதல்வர் சிவரஞ்சனி, உதவி பேராசிரியர் ஜான் வின்சென்ட், கல்லுாரி ஊழியர்கள் விஜய பசுபதி, பாலமுருகன், பிருத்திகா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்