உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்; பக்தர்கள் காப்புக்கட்டி விரதம்

முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்; பக்தர்கள் காப்புக்கட்டி விரதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா நேற்று துவங்கிய நிலையில் பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தை துவக்கினர். திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனி தண்டாயுதபாணி கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று கொடியேற்றுடன துவங்கியது. இதை தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் மாலை பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். கந்தக்கோட்டம் முருகன் கோயில், மலையடிவார தண்டாயுதபாணி சுவாமி கோயில், ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன்கோயில்விழா துவங்கியது. இதை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடந்தன. அபிராமி அம்மன் கோயிலில் உள்ள ஆறுமுகப் பெருமான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.கந்த சஷ்டி விழாவை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக அக்.27ல் சூரசம்ஹாரம், அக்.28ல் திருக்கல்யாணம் நடக்கிறது. நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி யாகசாலை , கணபதி ஹோமம், கோமாதா பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கொடிமரத்தில் கந்தசஷ்டி திருக்கொடி ஏற்ற,முருகப்பெருமானுக்கு 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் வீராச்சாமி, மணிமாறன், சுற்று கிராம பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று முருகப்பெருமான் சிவ பூஜை திருக்காட்சி, நாளை சிவ உபதேச திருக்காட்சி, அக்-25.-ல் அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளல், 26-ல் வேல்வாங்கும் திருக்காட்சியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கந்தசஷ்டி சூரசம்ஹாரம் 27- மாலை நடைபெறுகிறது. மறுநாள் காலை திருக்கல்யாணத்துடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை