மேலும் செய்திகள்
மானாமதுரையில் பொங்கல் பானைகள் தயார்
23-Dec-2024
கொடைக்கானல் : சுற்றுலா தலமான கொடைக்கானலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மண் பானை பொருட்கள் விற்பனைக்காக வந்துள்ளது.சுற்றுலாத்தலமான கொடைக்கானல் சுற்றிய மலை கிராமங்களில் மலை நெல் சாகுபடி நடந்து வருகிறது. இதை தொடர்ந்து தை மாத பிறப்பில் புத்தரிசி பொங்கல் இடுவது வழக்கம். மேலும் மண்ணால் செய்யப்பட்ட புது பானைகளில் பொங்கல் வைக்கும் நடைமுறை தொடர்கிறது. கொடைக்கானல் சுற்றிய மலை கிராமத்தினர் மண் பானைகள், மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை வாங்குவது வழக்கம். இதையடுத்து ஒரு வாரத்திற்கு முன் திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் கொடைக்கானலில் ஆங்காங்கே முகாமிட்டு மண் பானைகள், பூந்தொட்டி,அடுப்பு, தண்ணீர் தொட்டி, உணவு சமையல் செய்யும் மண்ணாலான பாத்திரங்கள் தயார் செய்து விற்பனை செய்கின்றனர். பொருளின் தரத்திற்கு ஏற்றார் போல் ரூ. 200 முதல் 600 வரை விற்கப்படுகிறது.நாகர்கோயில் வியாபாரி செந்தில்குமார் கூறியதாவது: ஒரு வாரத்திற்கு முன் பத்துக்கும் மேற்பட்டோர் வாகனங்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியிலிருந்து மண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானைகள், உணவு சமைக்கும் பொருட்கள், பூந்தொட்டிகள் , இதர பொருட்களை வாகனம் மூலம் கொண்டு வந்துள்ளோம். இப் பொருட்கள் தரமாக உள்ளதால் இங்கு உள்ள மக்கள் ஆவலுடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.
23-Dec-2024