உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கீரனுார் வாகீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

கீரனுார் வாகீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

கீரனுார்: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீரனூர் வாகீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா மார்ச் 15 காலை 7:00 மணிக்கு பிள்ளையார் வழிபாடு, யாக யாக பூஜைகளுடன் துவங்கியது.காப்பு கட்டுதல், முதல்க்கால வேள்வியுடன் மார்ச் 16ல் இரண்டாம், மூன்றாம் கால வேள்விகள் நடந்தன. நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால வேள்வி துவங்க தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 9:45 மணிக்கு அமிர்தகரவள்ளி, வாகீஸ்வரர் கோயில் சன்னதி கோபுர விமான கலசங்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை பழநி கோயில் அமிர்தலிங்க குருக்கள், செல்வ சுப்பிரமணியம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ