மழலையர் பட்டமளிப்பு
ஒட்டன்சத்திரம் : காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா நர்சரி , பிரைமரி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. விவேகானந்தா கல்வி குழுமத் தலைவர் கே.ரங்கசாமி, துணைத் தலைவர் எஸ்.கலைவாணி பட்டங்களை வழங்கினர். பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ரங்கசாமி, உதவி தலைமை ஆசிரியை செல்வராணி கலந்து கொண்டனர்.