உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பயணிகள் வருகையின்றி வெறிச்சோடிய கொடைக்கானல்

பயணிகள் வருகையின்றி வெறிச்சோடிய கொடைக்கானல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வரத்தின்றி முக்கிய சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது. சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தொடர் மழை பெய்து சீரற்ற வானிலை நிலவியது. சில தினங்களாக பளிச்சிடும் வெயில் நிலவி இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. கேரளா மாநில பயணிகள் வருகை இருந்த நிலையில் தற்போது அதுவும் இல்லை . உள் மாவட்ட பயணிகள் வருகையும் இல்லாத நிலை நீடிக்கிறது. இதையடுத்து இங்குள்ள சுற்றுலா தலங்களில் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடியது.எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் ஏரி சாலையில் கடைகள் பெருமளவு அடைக்கப்பட்டிருந்தது. ஏரியில் படகு சவாரி இன்றி வெறுமனே காணப்பட்டது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ