உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நகைகை ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு

நகைகை ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு

திண்டுக்கல்: மதுரை திருநகரை சேர்ந்தவர் ஆலிஸ்நிர்மலா27. குடும்பத்துடன் நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக வந்தார். நிகழ்ச்சி முடிந்து திண்டுக்கல் ஆரோக்கியமாதா கோயில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் ஆட்டோவில் பஸ் ஸ்டாண்ட் வந்தனர். ஆலிஸ் நிர்மலா பேக்கை ஆட்டோவில் விட்டு சென்றார். டிரைவர் ராஜ்குமார் பேக்கை பார்த்தபோது 6 பவுன் நகை இருப்பது தெரிய பேக்கை வடக்கு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் ஆலிஸ்நிர்மலாவை வரவழைத்து நகையை ஒப்படைத்தனர். ஆலிஸ்நிர்மலா குடும்பத்தினர் ஆட்டோ டிரைவர் ராஜ்குமாரின் நேர்மையை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ