மாணவர்களுக்கு பாராட்டு..
சின்னாளபட்டி: திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவிலான 2024--25ம் கல்வியாண்டு விளையாட்டுப் போட்டிகள் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் நவ. 5ல் நடந்தது. 14 வயது பிரிவில் 25க்கு 15 என்ற கோல் கணக்கிலும், 17 வயது பிரிவில் 33க்கு 5 என்ற கோல் கணக்கிலும், 19 வயது மாணவர் பிரிவில் 39க்கு 22 என்ற கோல் கணக்கிலும் சேரன் வித்யாலயா பள்ளி மாணவர்கள் வென்று மாநில போட்டிக்கு தேர்வாகினர்.இவர்களை பள்ளி தாளாளர் சிவக்குமார்,முதல்வர் திலகம், ஹேண்ட்பால் பயிற்சியாளர் அசோக்குமார், செந்தில்குமார், பள்ளி மேலாளர் பாரதிராஜா வாழ்த்தினர்.