கோயில்களில் கும்பாபிஷேகம்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே ஜவ்வாதுபட்டி ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீமுத்தாலம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.முதல் நாளன்று மங்கள இசை, விநாயகர் பூஜை, பஞ்சகவ்யம், தீபாரதனை நடந்தது.மகா கணபதி பூஜை, கும்பா அலங்காரம், யாக சாலை பிரவேசம் நடந்தது. விநாயகர் பூஜை, மூன்றாம் கால யாக வேள்வி நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடு கோபுர கலசங்களுக்கு பல்வேறு புண்ணிய நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.