மேலும் செய்திகள்
முத்தம்பட்டி சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
06-Jun-2025
வடமதுரை:வடமதுரை கொம்பேறிபட்டியில் ஸ்ரீ விநாயகர், காளியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.ஜூன் 30ல் தீர்த்த குடங்கள் அழைப்புடன் துவங்கிய விழாவில் 4 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. கொம்பேரிபட்டி, வெங்கடாஜலபுரம் ஊர் முக்கியஸ்தர்கள் ராஜரத்தினம், ஐயப்பன், பழனிச்சாமி, ரெங்கராஜ், சீரங்கன் முன்னிலை வகித்தனர். வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், பழனிச்சாமி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பையன், பொறுப்பாளர் பாண்டி பங்கேற்றனர்.கன்னிவாடி: தெத்துப்பட்டி அருகே புதுப்பட்டியில், வெற்றியூர் குல பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட பூரணை புஷ்கலா சமேத பரியேந்திர அய்யனார், தையல் நாயகி, மொண்டி கருப்பண்ணசாமி, முத்தையா, மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம், பொங்கல் வழிபாடு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.கொடைக்கானல்:- கொடைக்கானல் மேல்பள்ளம் பட்டி வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மூன்று கால யாகசாலை பூஜைகள் நடந்தன.தொடர்ந்து கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., வேணுகோபாலு கலந்து கொண்டார்.-
06-Jun-2025