வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சுதந்திரமாக வழக்கு நடத்த முடியாத நிலையை கண்டித்தும், வழக்கறிஞரை கண்ணியக்குறைவாகவும், அவமதிப்பு செய்யும் விதமாகவும் பேசிய மாஜிஸ்திரேட்டை கண்டித்தும், சம்பந்தபட்ட மாஜிஸ்திரேட்டு மாறுதலில் செல்லும்வரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தொடர் வழக்கு புறக்கணிப்பு செய்வதென தீர்மாணித்தும், திருச்சி, சென்னையில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கும் கண்டனம் தெரிவித்தும், தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவதை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்தியும் திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் குமரேசன், செயலாளர் செல்வராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.