உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கடிதம் அனுப்பும் போராட்டம்

 கடிதம் அனுப்பும் போராட்டம்

திண்டுக்கல்: நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை ரத்துசெய்ய வலியுறுத்தி திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைமை நீதபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்தது. இதற்காக பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து தலைமை தபால் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினர். சங்கத்தலைவர் குமரேசன், செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தனர். பழநி :வழக்கறிஞர் சங்கம், அட்வகேட் அசோசியேஷன் சார்பில் வழக்கறிஞர் சங்க தலைவர் மணிகண்ணன், அட்வகேட் அசோசியேஷன் செயலாளர் ஆசைத்தம்பி தலைமையில் தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை