எரியாத விளக்குகள்... உதவாத உள்ளாட்சிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் ரோடு சந்திப்பு, நகரின் முக்கிய பகுதிகளில் உயர் கோபுரவிளக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவைகளை பராமரிக்க வேண்டிய உள்ளாட்சிகள் கண்டு கொள்ளாமல் விடுவதால் முறையாக எரிவதில்லை. அப்படியே எரிந்தாலும் அனைத்து விளக்குகளும் எரிவதில்லை. பல இடங்களில் மாதக்கணக்கில் எரியாமல் உள்ளது. இது போன்ற எரியாத விளக்குகளை எரிய செய்ய உள்ளாட்சிகள் நடவடிக்கை அவசியமாகிறது.