உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீர் ஆதாரங்களை பாழாக்கும் உள்ளாட்சிகளை கண்காணிக்கலாமே: கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு

நீர் ஆதாரங்களை பாழாக்கும் உள்ளாட்சிகளை கண்காணிக்கலாமே: கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு

பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் குப்பை , கழிவுநீர் கலப்பதை உள்ளாட்சி அமைப்புகள் கண்டுகொள்ளாமல் விட்டதால் கோடையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாய நிலை உள்ளது.மாவட்டத்தில் உள்ளபெரும்பான்மையான நகர் பகுதிகளில் உள்ள சாக்கடை குளம்,ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கலப்பது போன்ற அமைப்பு உள்ளது. குப்பையை குளத்தின் கரை,சில இடங்களில் குளத்திற்கு உட்புறத்திலே கொட்டப்படுகின்றன. பாசனத்திற்கு நீர் பயன்படுத்தும் போது விளைநிலங்களில் துர்நாற்றம், சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. விவசாய நிலங்களில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளுக்கு நோய் தொற்று , தோல் வியாதிகள் ஏற்படுகின்றன. இதோடு கோடையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இதை தவிர்க்க சாக்கடை நீர் கலக்கும் வழித்தடங்களை கண்டறிந்து அதனை முறையாக கையாள வேண்டும். நீர் நிலைகளின் கரைகளில் குப்பை கொட்டுவதை உள்ளாட்சி அமைப்புகள் தவிர்த்து வேறு இடங்களை தேர்வு செய்து குப்பை கொட்ட முன் வர வேண்டும்.இதன் மூலம் நீர் நிலைகளை காப்பதோடு நிலத்தடி நீர் குறையாமல் தடுக்கவும் வழி ஏற்படும் .இதன் மீது மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Dharmavaan
ஏப் 17, 2025 09:03

உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருந்தால் அரசு இதை செய்யும் திருட்டு அரசு எப்படி செய்யும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை