மேலும் செய்திகள்
போக்குவரத்து இடையூறு ‘டூவீலர்கள்’ அகற்றம்
10-Nov-2026
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை குறைக்க ரோடு ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விதிகளை கடைபிடிக்க மாநகராட்சி, போலீஸ் சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எச்சரிக்கையை மீறி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் ஆம்புலன்ஸ், பஸ் வரும் வழியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 20க்கும் மேற்பட்ட டூவீலர்களுக்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டனர். விதிமீறலாக பார்க்கிங் செய்யப்பட்டிருந்த டூவீலர்கள், வாகனங்களுக்கு அபராதம் விதித்த போலீசார் எச்சரிக்கைக்கு பின் விடுவித்தனர்.
10-Nov-2026