உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நடுவழியில் நின்ற லொடக்கு பஸ்

நடுவழியில் நின்ற லொடக்கு பஸ்

செந்துறை : நத்தம் அருகே பயணிகளை ஏற்றி வந்த அரசு பஸ் பழுதாகி நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.நத்தம் பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று கோட்டையூருக்கு சென்ற அரசு டவுன் பஸ் 50ம் மேற்பட்ட பயணிகளுடன் நத்தம் சென்றது. குட்டுப்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்ற போது பழுதாகி நடுவழியில் நின்றது. ஓட்டுனரும் ,நடத்துனரும் முன்பக்க டயரை கழற்றி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர். பஸ்சில் பயணித்த பயணிகள், பள்ளி மாணவர்கள் 2மணி நேரம் காத்திருந்து மாற்று பஸ்சில் சென்றனர்.இதனிடையே நத்தம் பணிமனை ஊழியர்கள் வர பழுதை சரி செய்தனர். அங்கிருந்து பஸ் புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி