வேலையை பாருங்க சார்: முறையாக செலுத்தவில்லை கால்நடை தடுப்பூசி
மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வைக்கிறது. தற்போது 100 நாள் வேலை திட்டம் போன்ற காரணங்களால் தொழிலாளர் பற்றாக்குறையால் அவதிப்படும் விவசாயிகள், தென்னை, மா கொய்யா உள்ளிட்ட மரம் வளர்ப்புக்கு மாறி வருகின்றனர். அதே நேரத்தில் கறவை மாடு வளர்ப்பு மட்டுமே விவசாயிகளுக்கு கை கொடுத்து வருகிறது. குஜிலியம்பாறை தாலுகாவில் 40 ஆயிரம் கறவை மாடுகளும், மாவட்ட அளவில் 3 லட்சம் கறவை மாடுகளும் உள்ளன. இந்த மாடுகளுக்கான கானை தடுப்பூசி ஒவ்வொரு ஆண்டும் மார்ச், செப்டம்பர் என இரு முறை இலவசமாக செலுத்தப்படுகிறது. தற்போது செப்டம்பரில் போட வேண்டிய கணை தடுப்பூசி இன்னும் செலுத்தாததால் டிசம்பருக்குள்ளாவது செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.கானை தடுப்பு ஊசி செலுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதற்கு காரணம் அந்தந்த கால்நடை கிளை நிலையங்களில் போதிய ஆய்வாளர்கள், உதவியாளர்கள் இல்லாததே காரணம் என விவசாயிகள் குமுறுகின்றனர். விவசாயிகள் ,கால்நடை வளர்ப்போரின் நலன் கருதி அரசு கால்நடைத்துறை சார்பில் அனைத்து கால்நடை கிளை நிலையங்களிலும் முறையான ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.