வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வன விலங்குகளின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தால் அவைகள் எங்கேதான் செல்லும்? இந்த மண் மனிதனுக்கு மட்டும் உரிமை இல்லை. எல்லா உயிரினங்களுக்கும் உண்டு.
மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதி பல ஆயிரம் ஏக்கரில் உள்ளது. இதில் தேக்கு, சந்தனம் மரங்கள் , அரிய வகை மூலிகைகள் உள்ளன. யானை, சிறுத்தை, மான், காட்டு மாடு , காட்டு பன்றிகள் உள்ளிட்ட பல வனவிலங்குகள் உள்ளன. இவற்றில் யானை, காட்டுப்பன்றி, காட்டுமாடு போன்ற விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பொருட்களை சேதம் செய்கிறது. விவசாயிகளை தாக்கி காயமும் ஏற்படுத்துகிறது. தென்னை, வாழை, கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதம் செய்வதால் விவசாயிகள் பலத்த நஷ்டம் அடைகின்றனர். பெரும்பாலும் இரவில் காட்டுப்பன்றி வருவதால் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் சிரமம் அடைகின்றனர்.சில நாட்களுக்கு முன் ஒட்டன்சத்திரம் வனச்சரகம் வண்ணாதுரை, பொன்னிமலை சித்தர் கரடு, வரதமா நதி அணை பகுதியில் யானை நடமாட்டம் அதிகரித்து உள்ளது. வனப்பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் மன உளைச்சல் ஏற்படுவதுடன் பொருளாதார இழப்பும் அடைகின்றனர். வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.
வன விலங்குகளின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தால் அவைகள் எங்கேதான் செல்லும்? இந்த மண் மனிதனுக்கு மட்டும் உரிமை இல்லை. எல்லா உயிரினங்களுக்கும் உண்டு.