உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பைக்கில் வந்து நகை பறித்த லாரி உரிமையாளர் கைது

பைக்கில் வந்து நகை பறித்த லாரி உரிமையாளர் கைது

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் தாலிசெயினை டூவீலரில் வந்து பறித்த வழக்கில் லாரி உரிமையாளர் , டிரைவர் கைது செய்யப்பட்டனர்.வேடசந்துார் ஜி. நடுப்பட்டி கேத்தம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி பாப்பாத்தி 55. இவர் ரோட்டில் நடந்து சென்ற போது, டூவீலரில் வந்த இருவர் வழி கேட்பது போல் பேசி 6 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர்.டி.எஸ்.பி.,பவித்ரா, இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையில் போலீசார் அப்பகுதி சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்படி சாணார்பட்டி கோணப்பட்டியை சேர்ந்த வைக்கோல் வியாபாரியும் லாரி உரிமையாளருமான நாகராஜ் 45, அவரது டிரைவரான கொசவபட்டி அருமைராஜ் 45, ஆகியோரை கைது செய்தனர். பறித்த சங்கிலியையும் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை