உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாழ்வாக உள்ள மின் பெட்டியால் விபத்துக்கு வாய்ப்பு

தாழ்வாக உள்ள மின் பெட்டியால் விபத்துக்கு வாய்ப்பு

பெயர் பலகையில் போஸ்டர் திண்டுக்கல் அருகே சிறுமலை ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை பெயர் பலகையில் போஸ்டர்கள் ஒட்டி மறைத்துள்ளனர். பெயர்கள் தெரியாமல் வாகன ஓட்டிக்கள் பாதிக்கின்றனர். பெயர் பலகை மீது போஸ்டரை ஒட்டுவதை தடுக்க வேண்டும். சின்னக்காளை,சிறுமலை. .................--------பாதையில் குப்பை குவியல் பழநி இடும்பன் கோயில் அருகே வள்ளியப்பா கார்டன் நுழைவு பகுதியில் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் குப்பை கொட்டி குவிப்பதால் அசுத்தமாக உள்ளது .அப்பகுதியில் பக்தர்கள் செல்லும் போது முகம் சுளிக்கின்றனர். வர்ஷினி, பழநி. ..............-------- தாழ்வான மின் பெட்டி குஜிலியம்பாறை தாலுாகா டி.கூடலுார் கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில் தெரு விளக்கு மின் கம்பத்தில் சுவிட்ச் பெட்டி சேதமடைந்துள்ளது.இதுவும் தாழ்வாக சிறுவர்கள் கைக்கு எட்டும் துாரத்தில் உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. என்.சண்முகம்,டி.கூடலுர். ....................--------போக்குவரத்து இடையூறு கொடைக்கானல் பண்ணைக்காடு ரோட்டில் ரோட்டோரம் நிறுத்தும் வாகனங்களால் நாள்தோறும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது .பண்ணைக்காடு பேரூராட்சி நிர்வாகம் ,நெடுஞ்சாலைத்துறை அறவே கண்டு கொள்வதில்லை. பாலமுருகன், பண்ணைக்காடு. .........--------சேதமான ரோடு ஒட்டன்சத்திரம்- பழநி ரோடு அரசப்ப பிள்ளைபட்டி ரயில்வே கேட் பகுதியில் உள்ள ரோடு சேதம் அடைந்து உள்ளதால் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது .இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . -பாஸ்கர் ஒட்டன்சத்திரம்....................--------கழிவு நீரால் சிரமம் வடமதுரை ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலையில் தனியார் வங்கி எதிர்புறம் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். சீரமைப்பு பணி செய்ய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். -- சுப்பிரமணி, வடமதுரை. ......................-------- நாய்களால் அவதி பழநி கிழக்கு பாட்டாளி தெருவில் சுற்றி திரியும் நாய்களால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். டூவீலரில் செல்வோரை துரத்தும் நிலை உள்ளதால் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயன், பழநி. ....... ........


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை