உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காட்டுப்பன்றியால் சேதமான மக்காச்சோள பயிர்கள்

காட்டுப்பன்றியால் சேதமான மக்காச்சோள பயிர்கள்

நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி அருகே வாடிப்பட்டியில் மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதம் செய்ததால் விவசாயிகள் பாதிக்கின்றனர்.பழநி சுற்றுப்பகுதிகளில் விளை நிலங்களில் நெல், வாழை, மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாடிப்பட்டி தேவராஜ் தோட்டத்தில் உள்ள மக்காச்சோள பயிரை காட்டுப்பன்றிகள் சேதம் செய்தது. இதனால் விவசாயிக்கு நஷ்டம் ஏற்பட்டது. அடிக்கடி காட்டு விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. வனத்துறை, வருவாய் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை