அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர் கைது
சாணார்பட்டி:திண்டுக்கல் மாவட்டம்சாணார்பட்டி அருகே 10க்கும் மேற்பட்டவர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டார்.நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சந்திரன் 47. சலவை தொழிலாளி. மகள் ரேஷ்மா இவருக்கு அரசு இளநிலை உதவியாளர் வேலை வாங்கித்தருவதாக கூறி கோபால்பட்டி அருகேயுள்ள சின்னகோம்பைபட்டியை சேர்ந்த முருகன் 38, சில மாதங்களுக்கு முன் ரூ.1 லட்சம் வாங்கினார். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. திண்டுக்கல் மைக்கேலிடமும் ரூ.8 லட்சம் வாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றினார்.சந்திரன் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சாணார்பட்டி போலீசில் புகார் அளித்தார். முருகனை போலீசார் கைதுசெய்தனர். விசாரணையில் முருகன் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.