மேலும் செய்திகள்
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு ஆயுள்
13-Nov-2024
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.நத்தம் கொண்டையம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சதீஷ்குமார் 20. 2023ல் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகினார். காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்று திருமணம் செய்தார். சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் நத்தம் போலீசில் புகாரளித்தார்.அதன்படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. சதீஷ்குமாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.
13-Nov-2024