உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 25 ஆண்டு தலைமறைவு நபர் கைது

25 ஆண்டு தலைமறைவு நபர் கைது

திண்டுக்கல்: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் 48. 2000 ல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தங்கியிருந்து கள்ள ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட முயன்றார். தெற்கு போலீசார் கைது செய்தனர். ஜாமினில் வந்த அவர் தலைமறைவானார்.திண்டுக்கல் 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் லட்சுமணனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த லட்சுமணனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ