உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாரியம்மன் கோயில் கட்டு மானப்பணி பூமி பூஜை

மாரியம்மன் கோயில் கட்டு மானப்பணி பூமி பூஜை

வேடசந்தூர்: வேடசந்தூர் கடைவீதியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற அரசு கோயிலான மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கட்டடங்கள் சேதமடைந்ததால், ஊர் பொதுமக்கள் சார்பில் அரசு அனுமதி பெற்று, கட்டடத்தை அகற்றிய நிலையில், ரூ.50 லட்சம் திட்ட மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. கோயில் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., காந்திராஜன், பூமி பூஜையை துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கவிதா, வீரா.சாமிநாதன், நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி துணைத் தலைவர் சாகுல் ஹமீது, தி.மு.க., நிர்வாகிகள் ரவிசங்கர், கவிதாமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னம்பட்டி பழனிச்சாமி, பரமசிவம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை