வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இராக்கில் பெண்களின் திருமணவயது 9 ஆக குறைக்கப்பட்டுள்ளது
மேலும் செய்திகள்
சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு ஆயுள்
23-Oct-2024
திண்டுக்கல்; விருப்பாட்சியில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர், அவரது தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.குஜிலியம்பாறை லந்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா 50, இவரது மனைவி தேவிகா 45, மகன்கள் அஜித்22,மஜித் 19. இவர்கள் 2021ல் ஒட்டன்சத்திரம் விருப்பாட்சி அருகே தங்கியிருந்தனர். மஜித் விருப்பாட்சி பகுதி பள்ளியில் படித்த போது அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழகினார். இருவரும் காதலித்த நிலையில் மஜித் குடும்பத்தினர் ஊர் ஊராக சென்று பிழைப்பு நடத்துபவர்கள் என்பதால் வெளியூருக்கு செல்ல முடிவு செய்தனர். அப்போது அந்த சிறுமியையும் மஜித் தன் குடும்பத்தோடு வெளியூருக்கு அழைத்துச் சென்றார். சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் சத்திரப்பட்டி போலீசில் புகார் அளிக்க போலீசாரும் தேடினர். இவர்கள் அலைபேசி பயன்படுத்தாததால் அவர்களை கண்டுபிடிக்க திணறினர்.இதனிடையே மஜித்திற்கு 2021ல் சிறுவயதாக இருந்ததால் அவரது அண்ணன் அஜித் சிறுமியை திருமணம் செய்தார். இதனிடையே சிறுமி நாமக்கல் மாவட்டத்தில் இருப்பது போலீசாருக்கு தெரிந்தது. அங்கு சென்ற போலீசார் போக்சோ சட்டத்தில் தேவிகா, அஜித், மஜித் ஆகியோரை கைது செய்தனர். சிறுமியும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன்வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் அஜித்,தாய் தேவிகாவிற்கு ஆயுள் தண்டனை , தலா ரூ.1.50 லட்சம் அபராதம், மஜித்திற்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.
இராக்கில் பெண்களின் திருமணவயது 9 ஆக குறைக்கப்பட்டுள்ளது
23-Oct-2024