பதக்கம் வென்ற ஸ்ரீ குருமுகி
தாடிக்கொம்பு:மதுரை சகோதயா பள்ளியில் பள்ளிகள் இடையே நடந்த எறிபந்து போட்டியில் மதுரை,திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 23 பள்ளிகள் பங்கேற்றன. 8 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றதில் 682 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தாடிக்கொம்பு ஸ்ரீ குருமுகி வித்யாஸ்ரம் பள்ளிமாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். இவர்கள் 19 வயது மாணவர் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் ,19 வயது பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் , 17 வயது,14 வயது ஆண்கள் , பெண்கள் பிரிவிலும் தங்க பதக்கங்கள் ,12 வயது ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம், 12 வயது பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றனர். தங்கப்பதக்கங்களை வென்ற மாணவர்களை, பள்ளி தாளாளர் திவ்யா, நிர்வாகி செந்தில் குமார், முதல்வர் ஷியாமளா பாராட்டினர்.