உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சீதை உட்பட பெண் வேடமிட்டு வினோத நேர்த்திக்கடன் செலுத்திய ஆண்கள்

சீதை உட்பட பெண் வேடமிட்டு வினோத நேர்த்திக்கடன் செலுத்திய ஆண்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் சீதை போல பெண் வேடமிட்டு ஆண்கள் வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலில் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பெண்கள் மாவிளக்கு, பொங்கல், பால்குடம், அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். சீதை உட்பட பெண்கள் வேடமிட்டும் சிவன், ராமர், லட்சுமணன், ஆஞ்சநேயர், கருப்பசாமி, முருகன், ராமர், கிருஷ்ணன், கடோத்கஜன், குறவன் குறத்தி உள்பட பல வேடங்கள் தரித்த ஆண்கள் ஊர்வலமாக சென்றனர். விழாவில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை