மேலும் செய்திகள்
நத்தம் அருகே மலை பகுதியில் காட்டு தீ
23-Feb-2025
நத்தம் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேர்வீடு கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா 26. மனநலம் பாதிக்கப்பட்ட இவர் நத்தம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சுற்றித் திரிந்தார். நேற்று மதியம் பெட்ரோல் கேனுடன் பஸ் ஸ்டாண்டிற்குள் சுற்றி திரிந்த பவித்ரா, திடீரென பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்து கொண்டார். அருகில் இருந்த கடை உரிமையாளர்கள் ,பயணிகள் தண்ணீரை ஊற்றி , சாக்குகளை உடல் மேல் போர்த்தி தீயை அணைத்தனர். ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Feb-2025