உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அன்பு கரங்கள் திட்டம் தொடக்கம் அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அன்பு கரங்கள் திட்டம் தொடக்கம் அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்

ஒட்டன்சத்திரம்: இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் அன்பு கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக,'' உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். ஒட்டன்சத்திரம் கலைஞர் நுாற்றாண்டு வணிக வளாகத்தில் எம்.பி., நிதியிலிருந்து தலா ரூ. 10 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மூன்று உயர் மின் கோபுர மின்விளக்குகளை திறந்து வைத்தும், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது: அன்பு கரங்கள் திட்டத்தை இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். துாய்மையான நகராட்சிகளில் ஒட்டன்சத்திரம் நகராட்சி 16 வது இடத்தை பெற்றுள்ளது. நெடுஞ்சாலை துறையின் மூலம் பல்வேறு சாலை மேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. நான்கு மாடி கட்டடத்துடன் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையை முதலமைச்சர் விரைவில் திறந்து வைக்க உள்ளார் என்றார். எம்.பி., சச்சிதானந்தம், கலால் உதவி கமிஷனர் பிரபு, ஆர்.டி.ஒ., கண்ணன், நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சிக்கு கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு , தி.மு.க., ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர். கே. பாலு கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை