உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எஸ்.ஐ.ஆர். மீது தி.மு.க.,விற்கு அச்சமோ, பதட்டமோ இல்லை சொல்கிறார் அமைச்சர் பெரியசாமி

எஸ்.ஐ.ஆர். மீது தி.மு.க.,விற்கு அச்சமோ, பதட்டமோ இல்லை சொல்கிறார் அமைச்சர் பெரியசாமி

திண்டுக்கல்: ''வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை(எஸ்.ஐ.ஆர்.) மீது தி.மு.க., விற்கு எவ்வித அச்சமோ, பதட்டமோ கிடையாது,'' என, திண்டுக்கில் அமைச்சர் பெரியசாமி கூறினார். அவர் மேலும் கூறியதாவது : 2026 பிப்., ல் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில் எஸ்.ஐ.ஆர்., பணிகளை முறையாக மேற்கொள்ள கால அவகாசம் இல்லை. அவசரமாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகள் மூலம் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதே பா.ஜ., அரசின் வழக்கம். ஆனால் தமிழகத்தில் பா.ஜ., வின் நோக்கம் நிறைவேறாது. மக்களின் ஓட்டுரிமையை பறிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை. தேர்தலை நம்பிக்கையுடன் சந்திக்க முடியாத நிலையில் அ.தி.மு.க., பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. தேர்தல்களில் போலி வாக்காளர்கள் மூலம் தி.மு.க., வெற்றி பெறவில்லை. தி.மு.க., விற்கான அடித்தளம் உறுதியாக இருக்கிறது. அ.தி.மு.க., தலைமை மீது அக்கட்சியின் தொண்டர்களுக்கே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. மக்களும் நம்புவதற்கு தயாராக இல்லை. அக்கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கவில்லை. கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார்கள். தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இலவச மின்சாரம் தான் விவசாயிகளை வாழ வைத்து கொண்டிருக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை