சாதித்த மாணவருக்கு அமைச்சர் பாராட்டு
ஒட்டன்சத்திரம் : தெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர் அமைச்சர் சக்கரபாணியிடம் வாழ்த்து பெற்றார்.திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆர்.சி. ஜித்தின் அர்ஜூன், தெற்காசியா நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு 7.61 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் பெற்றார். இவர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் வாழ்த்து பெற்றார். பயிற்சியாளர் துரைராஜ், மாவட்ட தடகள சங்க பொருளாளர், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் சவட முத்து, கண்ணன், வேடசந்துார் தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன், பட்ஸ் பள்ளி தாளாளர் பொன் கார்த்திக், மாவட்ட தடகள சங்கத் துணைத் தலைவர் உடன் இருந்தனர்.