உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் அமைச்சர்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் அமைச்சர்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தொகுதி புஷ்பத்துார் ஊராட்சி சாமிநாதபுரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 150 நபர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.சாமிநாதபுரத்தில் அமராவதி ஆற்றுப்படுகையில் பெய்த கனமழை காரணமாக அதிக நீர் வரத்து ஏற்பட்டது. 60 குடும்பங்களை சேர்ந்த 150 பேர் மழைக்கால தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான குடிநீர், பிஸ்கட், பால்,உணவு வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பாய், தலையணை, பெட்ஷீட், வேட்டி, சேலை டீசர்ட், துண்டு ,10 கிலோ அரிசி உட்பட 21 வகையான மளிகை தொகுப்பை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார் .காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க மருத்துவ முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.கலெக்டர் பூங்கொடி, சப்கலெக்டர் கிஷன்குமார், தாசில்தார் பிரசன்னா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் அனிதா, ஒன்றிய தலைவர் சத்தியபுவனா, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு பாண்டி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை