உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆத்துார் அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு

ஆத்துார் அலுவலகத்தில் அமைச்சர் ஆய்வு

செம்பட்டி: ஆத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட 22 ஊராட்சிகளில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 1,254 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. நேற்று ஆத்துார் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த அமைச்சர் ஐ.பெரியசாமி இத்திட்ட பணிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டார். அதிகாரிகளிடம் உத்தரவு பெறப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை, அவற்றின் தற்போதைய செயல்பாட்டு நிலவரம் குறித்து விசாரித்தார். செங்கல், மண், சிமென்ட், கம்பி உள்ளிட்ட தளவாட சாமான்கள் சம்பந்தப்பட்ட திட்டப் பணிகளுக்கு கிடைக்கும் நிலை குறித்தும், இதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் அவற்றை களைவதற்கான ஆலோசனை வழங்கினார்.சம்பந்தப்பட்ட வீடுகளில் பயனாளிகள் விரைவில் குடியேறும் வகையில் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். தலைவர் மகேஸ்வரி, துணைத்தலைவர் ஹேமலதா, தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், பி.டி.ஓ., தட்சிணாமூர்த்தி, ஒன்றிய பொறியாளர் ராமநாதன் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை