கிரிவீதியில் அலைபேசி பாதுகாப்பு மையங்கள்
பழநி : பழநியில் தினமலர் செய்தி எதிரொலியாக மேலும் இரண்டு அலைபேசி பாதுகாப்பு மையங்கள் துவக்கப்பட்டுள்ளது.பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் அலைபேசி பாதுகாப்பு மையங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இது குறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக கோயில் நிர்வாகம் சார்பில் குடமுழுக்கு மண்டபம் செல்லும் வாயில் அருகே கூடுதலாக இரண்டு அலைபேசி பாதுகாப்பு மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் இலவச காலணி பாதுகாப்பு மையமும் துவக்கப்பட்டுள்ளது. இதனால் நெரிசல் நேரங்களில் பக்தர்கள் அலைபேசி பாதுகாப்பு மையங்களில் காத்திருக்கும் நேரம் குறையும்.