உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  பூர்ண சந்திரனுக்கு மோட்ச தீபம்

 பூர்ண சந்திரனுக்கு மோட்ச தீபம்

வத்தலக்குண்டு: மதுரையில் திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாததை கண்டித்து பூர்ண சந்திரன் தீக்குளித்தார். வத்தலக்குண்டில் பா.ஜ .,வினர் பஸ் ஸ்டாண்ட் முன்பு அவரது உருவப்படத்திற்கு மோட்ச தீபம் ஏற்றினர். அனுமதி இன்றி தீபம் ஏற்றியதால் பா.ஜ ., மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், நிர்வாகிகள் அண்ணாதுரை, கருணாநிதி, மருதைவீரன், கோகுல், ரகுபதி உட்பட 20 பேர் மீது வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3hhsl1z6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நத்தம் : நத்தம் தொகுதி பா.ஜ ., சார்பாக திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற உயிர்த்தியாகம் செய்த பூர்ணசந்திரனுக்காக மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நத்தத்தில் நடந்தது. தொகுதி பொறுப்பாளர் சொக்கர் தலைமை வகித்தார். தொடர்ந்து குட்டூர் அண்ணாமலையார் கோவிலில் பூர்ணசந்திரன் நினைவாக மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்யப்பட்டது. பா.ஜ.க., நிர்வாகிகள் ஆனந்த கிருஷ்ணன், வீரராகவன், பந்தள ராஜா, தனபால், மணிகண்டன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்