மேலும் செய்திகள்
தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம்
29-Jun-2025
பழநி : ''பழநி சுற்றுப்பகுதியில் மாலிப்டினம் சுரங்கத் திட்டம் உட்பட மக்கள் விரும்பாத எந்த திட்டமும் நிறைவேற்றப்பட மாட்டாது,'' என பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் தெரிவித்தார்.நெய்க்காரப்பட்டியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை துவங்கி வைத்த எம்.எல்.ஏ., செந்தில்குமார் பழநி 16 வது வார்டு நகராட்சி பூங்காவில் ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளை துவங்கி வைத்தார். நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, தி.மு.க., மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரபாகரன், நகர செயலாளர் வேலுமணி, நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் கலந்து கொண்டனர்.எம்.எல்.ஏ., செந்தில்குமார் கூறியதாவது: மாலிப்டினம் சுரங்கத் திட்டம் உட்பட எந்த திட்டமும் மக்கள் விரும்பாத வரை நிறைவேற்றப்படாது. மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்களுக்கு சில விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் மகளிர் உரிமை துறைக்கு விண்ணப்பித்து பயனடையலாம் என்றார்.
29-Jun-2025