பருவ மழை மீட்பு ஒத்திகை
திண்டுக்கல்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு மழை, வெள்ளம், மண்சரிவு போன்றவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள தீயணைப்பு , மீட்புத்துறையினரால் மாதிரி போலி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு நடந்த இதற்கு கலெக்டர் சரவணன் முன்னிலை வகித்தார்.