உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாயுமானவர் திட்டம் தொடக்கம்

தாயுமானவர் திட்டம் தொடக்கம்

நத்தம்: குட்டுப்பட்டியில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு செல்லும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடக்கவிழா நடந்தது. தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் விஜயன் தொடங்கி வைத்தார். வடக்கு வட்டார காங்., தலைவர் பழனியப்பன், தி.மு.க., மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டனர். செந்துறை - பெரியூர்பட்டியில் நடந்த விழாவை தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ